இந்த மென்பொருள் ஒரே சொடுக்கில் பல தமிழ் இணையதளங்களை ஒரு பக்கத்திலிருந்து அணுகுவதற்கான வசதியான தீர்வை வழங்குகிறது.
கல்வி, அகராதி, ஆய்வுக்கட்டுரை, இணையதளம், இலக்கியம், உரை ஒலி மாற்றி, ஒலி உரை மாற்றி, உரையாடி, எழுத்துப்பெயர்ப்பு, எழுத்துரு, கருவிகள், சொல்லாய்வு, அங்காடி, தட்டச்சு, மொழிபெயர்ப்பு, தொல்லியல், அகழ்வாய்வு, கல்வெட்டு போன்றவற்றவை பயண்படுத்த உதவுகிறது.
இந்த மென்பொருள் google chrome இல் இருக்கும் Bookmark போலவே செயல்படுகிறது. இதன் மூலம் உலகில் உள்ள பல மூளைகளில் உருவாக்கப்பட்ட சிறந்த தமிழ் செயல்பாடுகளை உடைய கருவிகளை இணைக்க வழி செய்கிறது. எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, சில நேரங்களில் சேமிக்க மறந்து விடுவோம், இவை அனைத்திற்கும் ஒற்றைத் தீர்வாக இந்த மென்பொருள் அமையும்.
வேற ஏதும் பயனுள்ள இணையதளங்களை, இதில் இணைக்கலாம் என்று பரிந்துரைக்க விரும்பினால் பரிந்துரையுங்கள்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் இல்லை. மூன்றாம் தரப்பு பக்கங்களில் ஏதேனும் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், அருள்கூர்ந்து எங்களுக்குத் தெரிவித்து உதவவும். எங்கள் மென்பொருளிலிருந்து தொடர்புள்ள இணைப்புகளை நீக்குவதன் மூலம் அவற்றை உடனடியாகச் சரி செய்யலாம்.
விரும்புக ! பிடித்திருந்தால் பகிர்க !
பின்னூட்டமிட்டு இந்த மென்பொருளை மேம்படுத்த உதவுக.